நாம் யார்?

மருதமுனையின் வரலாற்றுப் பாரம்பரியத்தை பாதுகாப்பதையும், மறுவாழ்வளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு Heritage Maruthamunai குழுமம் செயல்பட்டு வருகிறது. இக்குழுமத்தில் மருதமுனையைச் சேர்ந்த பல துறைகளைச் சார்ந்த தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர்.


மருதமுனையின் வரலாறு, பாரம்பரியம், கலாசாரம் மற்றும் மக்களின் வாழ்வியல் பண்பாட்டைப் பற்றிய ஆழ்ந்த ஆர்வத்தின் அடிப்படையில், எமது குழுமம் இச் செயல்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல்கள், ஆவணங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள் மற்றும் தகவல்களை தொகுத்து, எண்ணிம வடிவத்தில் பதிவு செய்து, அவை ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்களால் எளிதில் அணுகக்கூடிய வகையில் வழங்கப்படுகின்றன.


மருதமுனையின் பாரம்பரியம் மீதான எங்கள் இந்த அக்கறை, எதிர்கால சந்ததியினருக்கான ஒரு மதிப்புமிக்க பொக்கிஷமாக உருவெடுக்கட்டும் எனும் நோக்கத்தில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எமது நோக்கம்

சிதறி கிடைக்கின்ற மருதமுனை மண் சார்ந்த ஆவணங்களை இலத்திரினியல் முறையில் ஆவணப்படுத்துதல்

எம்முடன் தொடர்பு கொள்ள

எமது இந்த முயற்சி தொடர்பில் உங்களுக்கு கேள்விகள் இருப்பின் எங்களை தொடர்பு கொள்க

Website is Developed by: Team DigiRoot 🥕