கிழக்கின் உயர் கல்விப்புலம் மருதமுனை. தொன்மைப் புகழ்கொண்டது. சிறப்புமிக்க இந்த மண்ணின் வரலாற்றுச் சிறப்புகளை ஆவணப்படுத்த இந்த மண்ணின் இளம் கல்வியாளர்களின் இந்தமுயற்சி பெரிதும் பாராட்டத்தக்கதாகும். ”வரலாற்றை அறியாத சமூகத்திற்கு எதிர்காலமில்லை” என்பார் இஸ்லாமிய வரலாற்றுப் பேரறிஞர் இப்னு கல்தும். நீண்டபெரு வரலாற்றுப் பெருமைகொண்டது நாம்பிறந்தமண் என்பதை மனங்கொண்ட இந்த இளம் தலைமுறையினரை நான் இதே மண்ணில் பிறந்தவன் என்ற முறையில் மனமாரப் பாராட்டி மகிழ்கின்றேன். அவர்களின் இம் முயற்சி வெற்றிபெற நெஞ்சார வாழ்த்துகின்றேன்.