வாசிக்க
புத்தக விபரம்
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் மருதமுனைக்கு வந்த இப்றாலெப்பை ஆலிமுக்கு மீராலெவ்வை என்ற மகன் பிறந்தார். காயல்பட்டினத்தில் மார்க்கக் கல்வி பயின்ற மீராலெவ்வை, தனது மாணவர்களுடன் தமிழையும் கற்றார். ஊர் திரும்பிய அவர் களிமடுக் கண்டத்தில் விவசாயம் செய்தார்.
அங்கு "ஆலிமின் பிட்டி" அவரது இருப்பிடமாக அமைந்தது. மாரி குறைந்த காலத்தில் அவர் பாடிய "மழைக்காவியம்" மூலம் மழை பெய்ததால் அவர் "சின்ன ஆலிம் அப்பா" என அழைக்கப்பட்டார்.
அவரது ஆதரவால் பலர் காணிக்காரர்களாயினர். அவரது மழைக்காவியத்தை பலர் பாடக் கேட்டிருக்கிறேன். அச்சில்லாத காலத்தில் இருந்த கையெழுத்துப் பிரதியை M. S. M. இப்றாம் அச்சிட்டார். துறவறம் பூண்ட சக மாணவர் மஸ்தான் ஸாஹிபின் ஷரீஅத்திற்கு முரணான கவிதைகளுக்கு மறுப்பாக ஆலிம் அப்பா "ஞானரை வென்றான்" எனும் நூலை எழுதினார்.
மருதமுனை வடதெரு பள்ளிவாசல் கட்டும் போது ஆலிம் அப்பா விவசாயத்தை விட்டு திருகோணமலை வெள்ளைமணலுக்கு குடிபெயர்ந்தார். அங்குள்ள அவரது அடக்கஸ்தலம் புனித இடமாகக் கருதப்படுகிறது. 1926ல் புகையிரதப் பாதை அமைக்கும்போது அவரது அடக்கஸ்தலத்தை மறித்துச் சென்ற ரயில், பாதை மாற்றப்பட்ட பின்னரே சென்றது. ஆலிம் அப்பாவின் சந்ததியினர் சிலர் இன்னும் மருதமுனையில் வசிக்கின்றனர்.
உள்ளடக்கம்
- முன்னுரை
- அத்தியாயங்கள்
மழைக்காவியம் | |
---|---|
![]() |
|
உருப்படி எண் | 000001 |
ஆசிரியர் | சின்னாலிமப்பா |
புத்தக வகை | கவிதைத்தொகுப்பு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அந்-நுஸ்ரத் |
வெளியிட்ட ஆண்டு | 1995 |
பக்கங்கள் | 21 |